நிர்பயா குற்றவாளிகள் உள்பட 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தார்1123497887
நிர்பயா குற்றவாளிகள் உள்பட 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தார் புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து வருகிற 18-ந்தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்து உள்ளார். பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகத்ராய். இவர் ராம்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தை சேர்ந்த விஜயேந்திர மகோத்தா மனைவி மற்றும் 5 குழந்தைகள் வீட்டுக்கு தீ வைத்து உயிரோடு எரித்துக்கொன்றார். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக ஜகத் ராய் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதையடுத்து அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்த கருணை மனுவை தான் முதன் முதலாக ராம்நாத் கோவிந்த் பதவிக்கு வந்ததும் நிராகரித்தார் இதன் தொடர்ச்சியாக நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை கடந்த 2020-ம் ஆண்டு நிராகரித்தார். 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா கூட்டு பா...