தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை தினங்கள்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை தினங்கள்! தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆண்டு இறுதி தேர்வுக்கு பிறகு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. கோடை விடுமுறை: தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. மேலும் இதனால் மாணவர்கள் நேரடி வகுப்புகளில் இருக்கும் சுவாரஸ்யங்களை பெறாமல் இருந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டது. அதனை தொடர்ந்து நேரடி தேர்வுகளும் நடைபெறு வருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து அதற்கான தேதியையும் அறிவித்தது. இந்த நிலையில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளனர். அதனால் மாணவர்களும் மும்முரமாக படித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். 10, 11 மற்றும்...