ரூ.50 லட்சம் மோசடி புகாரில் பா.ஜ.க ஆதரவாளர் கைது!1105453759
ரூ.50 லட்சம் மோசடி புகாரில் பா.ஜ.க ஆதரவாளர் கைது! பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கு பிரசித்தி பெற்ற இக்கோவிலை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் இடித்து தள்ளியதாக புகார் எழுந்தது. வேறு மதத்தை சேர்ந்தவர்கள் கோயிலில் புகுந்து சிலைகளை உடைத்ததாக இந்து மதத்தினர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மற்ற மதத்தினருக்கு தொடர்பில்லை என கண்டுபிடித்ததுடன், சிலை உடைப்பில் ஈடுபட்ட ஒருவரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கோவிலை புனரமைக்கும் பணியில் கார்த்திக் கோபிநாத் என்பவர் இறங்கினார். இளைய பாரதம் என்ற யூ டியூப் சேனல் நடத்தி வந்த அவர், தீவிர பா.ஜ.க ஆதரவாளராகவும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமாகவும் காட்டிக் கொண்டார். அமித்ஷா தமிழகம் வருகையின்போது ஏர்போர்டில் சென்று வரவேற்றவர்களில் ஒருவராகவும் இருந்தார். இந்நிலையில், கோவில் புனரமைப்பு பணிக்காக கார்த்திக் கோபிநாத் வசூல் செய்த பணத்தில் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. கோடி கணக்கில் பணத்தை வசூலித்து, கோவில் புனரமைப்புக்கு செலவு செய்...