ஆம்னி பேருந்தில் அமைச்சர் அதிரடி ஆய்வு...! கூடுதல் கட்டணத்தை திருப்பி வழங்க உத்தரவு!
ஆம்னி பேருந்தில் அமைச்சர் அதிரடி ஆய்வு...! கூடுதல் கட்டணத்தை திருப்பி வழங்க உத்தரவு! தமிழ் புத்தாண்டையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட காரணத்தால், சொந்த ஊருக்கு செல்ல அதிகளவில் பயணிகள் குவிந்த காரணத்தால் ஆம்னி பேருந்தில் பயணிக்க கட்டணமாக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி வழங்க ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார். சிறப்பு பேருந்து இயக்கம் தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி உட்பட தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறை தினம் வருவதன் காரணமாக பயணிகள் சொந்த ஊருக்கு சென்று வர திட்டமிட்டிருந்ததனர். இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு எப்போதும் இயக்கப்படும் பேருந்துகளுடன் 1,200 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டது. இதே போல விடுமுறை தினம் முடிவடைந்து சென்னை திரும்புவதற்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமி...