இன்று விடுமுறை அறிவித்த பள்ளிகளுக்கு நோட்டீஸ்: அமைச்சர் அன்பில் பொய்யாமொழி1488117675
இன்று விடுமுறை அறிவித்த பள்ளிகளுக்கு நோட்டீஸ்: அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் வன்முறை நிகழ்ந்த தனியார் பள்ளியில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று வன்முறை ஏற்பட்டது. பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது. கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இதில், பேருந்துகள், காவல் துறை வாகனங்கள் தீக்கிரையாகின. பள்ளி வளாகமும் சூறையாடப்பட்டது. இந்நிலையில், வன்முறை நிகழ்ந்த பள்ளியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அம...