கர்ப்பமடைந்ததை போல் உண்டாகும் போலியான அறிகுறிகள்... காரணங்களும்.. கண்டறியும் வழிகளும்..!


கர்ப்பமடைந்ததை போல் உண்டாகும் போலியான அறிகுறிகள்... காரணங்களும்.. கண்டறியும் வழிகளும்..!


திருமணமான சில காலத்திலேயே, பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி கர்ப்பமாக இருக்கிறாயா, எப்போது குழந்தை, என்பதுதான். திருமணம் செய்த பின் குழந்தை சிறிது காலத்துக்குப் பின் பெற திட்டமிட்டிருந்தாலும், அல்லது அப்படியான திட்டம் எதுவும் இல்லை என்றாலும் கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான கால கட்டமாகும். அதுவும் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு பெண்களுக்கு அது மிகவும் மகிழ்ச்சியான காலம் என்றே கூறலாம். அவ்வாறு இருக்கும் சமயத்தில், கரு உருவான அனைத்து அறிகுறிகளும் தோன்றி, ஆனால், அது கர்ப்பம் இல்லை என்று தெரிய வருவது மனசங்கடத்தை உண்டாக்கும்.

பிரக்னன்ஸி டெஸ்ட் செய்துவிட்டு, கிட்டில் இரண்டு பிங்க் நிற கோடுகள் வருவதை காண்பதற்கு எத்தனையோ பெண்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். சில நேரங்களில் மாதவிடாய் கால தாமதமாக வரும்போது அது கர்ப்பம் என்று தவறாக பல பெண்கள் நினைத்துக் கொள்கின்றனர். அது மட்டுமின்றி கர்ப்பத்தின் ஆரம்ப கால அறிகுறிகளான தாமதமான மாதவிடாய், வலி மிகுந்த மார்பகங்கள் காலையில் எழுந்தவுடன் குமட்டல் மற்றும் வாந்தி வருவது போன்ற உணர்வு ஆகிய அனைத்துமே தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு பெண்ணை நம்ப வைக்கின்றன.

வயிற்றில் கரு உருவாக்கி வளரும் போது இந்த அறிகுறிகள் அனைத்துமே தோன்றும். ஆனாலும் கரு உருவாகாமல், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது காணப்படும் அறிகுறிகள் தோன்றுவது ஃபால்ஸ் பிரக்னன்ஷி அல்லது போலி கர்ப்பம் என்று கூறுவார்கள். மருத்துவ ரீதியாக இது சூடோசைஸிஸ் (Pseudocyesis) என்று கூறப்படுகிறது.

உளவியல் காரணங்களால் போலி கர்ப்பம் ஏற்படுகிறது?

கர்ப்பமாகவில்லையே என்ற பயம் அல்லது ஏக்கம்:

கர்ப்பமாக முயற்சி செய்யும் பெண்களுக்கு சில நேரங்களில் உடலும் மனமும் கர்ப்பமாக இருப்பதாக போலியான சிந்தனையை தோற்றுவித்து, அதன் அறிகுறிகளை உண்டாக்கும். இந்த அறிகுறிகள் உடலின் எண்டோக்ரைன் சிஸ்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி கரு உண்டான அறிகுறிகளாக வெளிப்படும்.

உணர்வு ரீதியான பாதிப்பு:

Emotional trauma என்று கூறப்படும் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது ஏதேனும் பிரச்சனையிலிருந்து வெளி வராமல் இருந்திருந்தால், அது கர்ப்பம் சார்ந்த அறிகுறிகளை வெளிப்படுத்தும். உதாரணமாக குழந்தை இறப்பு அல்லது கருக்கலைப்பு அல்லது நீண்ட காலமாக குழந்தைக்கு முயற்சி செய்து கரு உருவாகாமல் இருப்பது ஆகிய அனைத்துமே மூளையின் சிந்தனையை பாதித்து கர்ப்பமாக இருப்பதாக அறிகுறிகளை மூளையின் வழியாக உணர்த்தத் துவங்கும்.

also read :கர்ப்பகால மசக்கையால் அவதிப்படுகிறீர்களா..? இதை குடிச்சா குமட்டல் குறையலாம்..!

குழந்தை வேண்டும் என்ற தீவிரமான ஆசை தான் தனக்கு குழந்தை பிறக்க இருக்கிறது என்று நினைக்க வைக்கும். இளம் வயதின் மறக்க முடியாத நினைவுகள், இளம் வயதில் ஏற்பட்ட பலவிதமான மன ரீதியான பிரச்சனைகள், உதாரணமாக வறுமை, சரியான கல்வி இல்லாமை, அல்லது பாலியல் துன்புறுத்தல் ஆகியவும் கர்ப்பம் ஏற்பட்டிருப்பதாக அறிகுறிகளை உணர்த்தும்.

இந்த உளவியல் ரீதியான காரணங்களை தவிர்த்து வேறு சில மருத்துவ காரணங்களும் போலி கர்ப்பத்தை உண்டாக்கும். எடை அதிகரிப்பு, வாயு கோளாறு அல்லது கட்டி ஆகியவற்றால் வயிறு வீக்கமாக காணப்படுவது கர்ப்பத்தின் அறிகுறிகளை உண்டாக்கும். அதேபோல கர்ப்பப்பையில் கட்டி அல்லது நீர் கட்டிகள் வளர்வது ஆகியவை கர்ப்பத்தின் அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

போலி கர்ப்பத்தின் அறிகுறிகள்:

உண்மையான கரு உருவாகும் போது எந்தவிதமான அறிகுறிகள் எல்லாம் தோன்றுகிறதோ அவை அனைத்துமே போலி கர்ப்பத்துக்கும் இருக்கும். மாதவிடாய் தள்ளிப்போவது, வயிறு பெரிதாகவது, மார்பகம் தளர்ந்து லேசான வலி இருப்பது, வயிற்றுக்குள் சிசுவின் அசைவு, மசக்கை, எடை அதிகரிப்பு ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.

also read : கருவை பாதிக்கும் கர்ப்பிணிகளின் மன அழுத்தம் : செய்ய வேண்டியவை என்ன..?

போலி கர்ப்பத்தைக் கண்டறிவது எப்படி?

போலி கர்ப்பத்தை அறிகுறிகள் மூலம் அவ்வளவு எளிதாக தெரிந்து கொண்டு விட முடியாது. வயிற்றில் கரு வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு ஸ்கேன் செய்யப்படும். எனவே அல்ட்ரா சவுண்ட் செய்து செய்வதன் மூலமும், பிரக்னன்ஸி டெஸ்ட் மூலமும் குழந்தை கருவில் வளர்கிறதா அல்லது போலி கர்ப்பமா என்பதைக் கண்டறிய முடியும்.

ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் போது இந்த இரண்டு டெஸ்டின் முடிவுகளும் நெகடிவ் என்று காண்பித்தால், அது போலி கர்ப்பம் என்று மருத்துவரால் உறுதி செய்யப்படுகிறது. உளவியல் ரீதியான காரணங்கள் இதில் உள்ளதால், பெண் கர்ப்பமில்லை என்பதை உறுதிப்படுத்தப்படும் போகுது இந்த அறிகுறிகள் விரைவிலேயே மறையத் தொடங்கிவிடும். போலி கர்ப்பம் ஏற்பட்ட பெண்ணின் மனநிலைக்கு ஏற்ப ஆலோசனை மற்றும் தெரப்பி ஆகியவை மருத்துவரால் பரிந்துரைக்கப்படும்

 

Comments

Popular posts from this blog