இணையத்தை கலக்கும் நான்கு காது பூனை1210647828

இணையத்தை கலக்கும் நான்கு காது பூனை
நான்கு காதுகளுடன் பிறந்துள்ள ஒரு பூனை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மிடாஸ் என்பது தான் அதன் பெயர். மரபணு மாற்றம் காரணமாக கூடுதலாக இரண்டு காதுகளை கொண்ட இந்த பூனை இன்ஸ்டாகிராமில் பேசு பொருளாக இருந்து வருகிறது. இதன் பெயர் மிடாஸ்.
இது ரஷ்ய நீல வகையைச் சேர்ந்த பூனை. தற்போது துருக்கியில் வசித்து வருகிறது. ” தனித்துவமான மரபணு மாற்றத்தால் மிடாஸ் நான்கு காதுகளைக் கொண்டுள்ளது” எனக் கூறியுள்ளார் இதன் உரிமையாளரான கேனிஸ்,.
மிடாஸின் வீடியோவை வெளியிட்டவர், “அவள் தனது புதிய வீட்டில் அழகான வாழ்வை வாழ்வதில் பிசியாக இருக்கிறாள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கேனிஸ், “அவள் விளையாட்டுத் தனமானவள், ஆனால் அன்பானவள். இரவு முழுவதும் விழித்திருந்தே நேரத்தை கழிக்கிறாள். மிடாஸின் கேட்கும் திறனில் எந்த குறியுமில்லை” என்கிறார் கேனிஸ்.
4 காதுகள் மட்டுமில்லாமல் மிடாஸின் அடையாளமாக வயிற்றில் வெள்ளை நிற இதய வடிவம் ஒன்றும் இருக்கிறதாம்.
Comments
Post a Comment