Meena: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் திடீர் மரணம்... பயங்கர ஷாக்கில் திரையுலகம்!


Meena: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் திடீர் மரணம்... பயங்கர ஷாக்கில் திரையுலகம்!


பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகரின் திடீர் மரணம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னணி நடிகை

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாகவும் அவருக்கு ஜோடியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இதேபோல் கமல்ஹாசன், அஜித், விஜய், சத்யாராஜ், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கணவர் வித்யாசாகர்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்துள்ளார் மீனா. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

கொரோனா பாதிப்பு

இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா தொற்றால் சமீபத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சைப் பலனின்றி மரணம்

வித்யாசாகரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இரவு 9 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார். 48 வயதே ஆன வித்யாசாகரின் மரணம் ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog