தனுஷின் தி கிரே மேன் எப்படி இருக்கு...அசத்தலா - சொதப்பலா? 1843631800


தனுஷின் தி கிரே மேன் எப்படி இருக்கு...அசத்தலா - சொதப்பலா?


சென்னை : நெட்டிஃபிளிக்சின் பிரம்மாண்ட தயாரிப்பாக, ருசோ பிரதர்ஸ் இயக்கத்தில் The Gray Man என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது The Gray Man படம். ஜுலை 18 ம் தேதி அமெரிக்காவில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம், ஜுலை 22 ம் தேதி மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் பார்ப்பதற்காக நெட்ஃபிளிக்சில் வெளியிடப்பட்டது.

தனுஷின் முதல் ஹாலிவுட் படம் என்பதால் இந்தியாவிலும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள The Gray Man, 2 மணி நேரம் 9 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டது. Chris Evan, Ryan Gosling, தனுஷ் முக்கிய ரோல்களில் நடித்துள்ள படம். கதை முழுவதுமே இவர்களை சுற்றி தான் நகர்கிறது.

The Gray Man படம கிட்டத்தட்ட 200 மில்லியனுக்கும் அதிகமான டாலர் (இந்திய மதிப்பில் 1598 கோடி) செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மிரட்டலான இசை ஆகிய டீசர், டிரைலர் ஆகியவற்றிலேயே அசத்தி இருந்தனர். இதனால் ரசிகர்களும் The Gray Man ன் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை பார்க்க ஆவலாக இருந்தனர்.

படத்தின் ஆரம்பமே ஜெயில் தான். புளோரிடா சிறையில் கைதியாக இருக்கும் Ryan Gosling ஐ சிஐஏ.,விற்காக பணியாற்ற வேண்டும் அழைத்துச் செல்கிறார்கள். அப்படியே 18 ஆண்டுகளுக்கு பிறகு பாங்காக்கில் காட்டப்படுகிறது. ஒருவரை கொலை செய்வதற்காக Sierra Six என்ற Ryan Gosling அனுப்பப்படுகிறார். அவர் சாகும் போது தனது கழுத்தில் கிடந்த லாக்கெட் சிக்ஸ் இடம் கொடுத்து விட்டு இறக்கிறார். அவரிடம் உள்ள பொருட்களை கைப்பற்ற வருவது.ஆனால் சிக்ஸ் அந்த லாக்கெட்டை திறந்து பார்க்க, அதற்குள் மெமரி கார்டு ஒன்று உள்ளது. இதனால் சிக்சை அந்த கும்பல் விடாமல் துறத்துகிறது.

கதை அப்படியே லண்டன், துருக்கி என பல நாடுகளுக்கும் பயணிக்கிறது. Ryan Gosling ஐ பிடிக்க Chris Evan துரத்திக் கொண்டிருக்கிறார். கடைசியில் Ryan Gosling சிக்கினாரா, அவரிடம் இருந்த அந்த மெமரி கார்டை Chris Evan கும்பலிடம் ஒப்பைடக்கிறாரா. அந்த மெமரி கார்டில் அப்படி என்ன ரகசியம் இருந்தது என்பது தான் படத்தின் கதை. இதை தான் இரண்டு மணி நேர கதையாக ஆக்ஷன், அதிரடி துப்பாக்கி சண்டைகள், தமிழ் படங்களில் வருவது போன்ற நக்கல் டயலாக்குகள் ஆகியவற்றுடன் சொல்லி இருக்கிறார்கள்.

சீரியசாக ஒருவரிடம் விசாரித்துக் கொண்டிருக்கையில் போன் அடிப்பதும், வேலை நேரத்தில் போனை ஆஃப் செய்ய சொல்லி இருக்கிறேன்ல என்பவரிடம் அடிப்பது உங்க போன் தான் என சொல்வது எல்லாம் சீரியஸ் சீனிலும் நக்கலா என நினைக்க வைக்கிறது. த்ரில்லர் கலந்த மசாலா படமாக இதை சொல்ல முயற்சித்துள்ளனர்.Ryan Gosling ஐ துரத்தும் கும்பலால் அனுப்பப்படும் ஒரு பயங்கர கொலையாளியான Avik San ரோலில் தான தனுஷ் நடித்துள்ளார். Ryan Gosling மறைத்து வைத்துள்ள உண்மையை கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை. Ryan Gosling தான் அந்த கிரே மேன்.

Chris Evan, Ryan Gosling, தனுஷ் ஆகியோர் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள். தனுஷ் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் முக்கியமான ஒரு ரோலை அழுத்தமாக செய்திருக்கிறார். கடைசி ஒரு மணி நேரம் மிக விறுவிறுப்பாக கதையை நகர்த்தி உள்ளனர். ஆக்ஷன், இசை இரண்டும் படத்திற்கு மிகப் பெரிய பலமாக உள்ளது.

இருந்தாலும் படம் பார்த்து முடிக்கும் போது, கதை இன்னும் முடிவு பெறாமல் பாதியில் நிற்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. படத்தின் ஆரம்ப 30 நிமிடங்கள் இவர் யார், இவர் யார் என்ற குழப்பத்துடனேயே செல்கிறது. ஃபர்ஸ்ட் ஆஃப் கொஞ்சம் போராக தான் போகிறது. செகண்ட் ஆஃப் பார்க்கலாம். ஒரு முழுமையான படத்தை பார்த்த திருப்தி ஏற்படாததால், பெரும்பாலும் The Gray Man படம் நெகடிவ் விமர்சனங்களையே பெற்றுள்ளது. இந்திய ரசிகர்கள் தனுஷிற்காக படத்தை பார்க்கிறார்கள்.

மற்றபடி The Gray Man படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக கதையை சொல்லி இருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ரசிகர்கள் இந்த படத்திற்கு 5 க்கு 3 என்ற அளவிலேயே ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog