3 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று! ஆந்திராவில் நடந்த கொடூரம் ! ஹைதராபாத்: தலசீமியா நோயாளியான மூன்று வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ரங்க ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராம் பல்லி கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன்.இவனுக்கு ஏழு மாதங்களிலிருந்து தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்த நிலையில் வித்யாசாகரில் உள்ள இரத்த வங்கி குடும்பத்தில் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் இரத்தம் ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் “ஜூலை 20 ஆம் தேதி, குழந்தை தனது பெற்றோருடன் இரத்த வங்கிக்கு இரத்த மாற்றத்திற்காக வந்த நிலையில் துணை மருத்துவர்கள் எச்.ஐ.வி பரிசோதனை செய்தனர்.அந்த பரிசோதனையில் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ரத்தம் செலுத்துவதற்காக ரத்த வங்கிக்குத் தவறாமல் சென்று வருவதாகவும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை HIV பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நல்லகுண்டா காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.