Dating app-ல் வலைவிரிக்கும் மர்ம கும்பல்!!225803091

Dating app-ல் வலைவிரிக்கும் மர்ம கும்பல்!!
வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு மத்தியில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் பலவித விபரீதங்கள் நேரிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அப்போது டேட்டிங் ஆப் மூலமாக ஒரு பெண்மணியிடம் சேட்டிங் செய்ததாகவும் அப்போது அவர் தன்னை நிர்வாணப்படுத்தி காட்சிகளை வீடியோ எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பிறகு 2 மணி நேரம் கழித்து தனக்கு ஒரு போன் கால் வந்ததாகவும், அப்போது ஒரு ஆண் நபர் பணம் கேட்டு தொல்லை கொடுத்தாக தெரிவித்துள்ளார். இதனால் பதறிப்போய் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறியுள்ளார்.
இருப்பினும் வெவ்வேறு போன் நம்பர்களிலிருந்து தனக்கு கால் வந்துள்ளதாக அப்புகாரில் கூறியுள்ளார். இதனால் பழக்கம் இல்லாதவர்களிடம் சேட்டிங் ஆப் மூலமாக பழக வேண்டாம் என கூறியுள்ளார்.
Comments
Post a Comment