கர்ப்பமடைந்ததை போல் உண்டாகும் போலியான அறிகுறிகள்... காரணங்களும்.. கண்டறியும் வழிகளும்..! திருமணமான சில காலத்திலேயே, பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி கர்ப்பமாக இருக்கிறாயா, எப்போது குழந்தை, என்பதுதான். திருமணம் செய்த பின் குழந்தை சிறிது காலத்துக்குப் பின் பெற திட்டமிட்டிருந்தாலும், அல்லது அப்படியான திட்டம் எதுவும் இல்லை என்றாலும் கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான கால கட்டமாகும். அதுவும் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு பெண்களுக்கு அது மிகவும் மகிழ்ச்சியான காலம் என்றே கூறலாம். அவ்வாறு இருக்கும் சமயத்தில், கரு உருவான அனைத்து அறிகுறிகளும் தோன்றி, ஆனால், அது கர்ப்பம் இல்லை என்று தெரிய வருவது மனசங்கடத்தை உண்டாக்கும். பிரக்னன்ஸி டெஸ்ட் செய்துவிட்டு, கிட்டில் இரண்டு பிங்க் நிற கோடுகள் வருவதை காண்பதற்கு எத்தனையோ பெண்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். சில நேரங்களில் மாதவிடாய் கால தாமதமாக வரும்போது அது கர்ப்பம் என்று தவறாக பல பெண்கள் நினைத்துக் கொள்கின்றனர். அது மட்டுமின்றி கர்ப்பத்தின் ஆரம்ப கால அறிகுறிகளான தாமதமான மாதவிடாய், வலி மிகுந்த மார்பகங்கள் கால...
Comments
Post a Comment