இரும்பு கேட் விழுந்து பலி.. தந்தையை பார்க்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!


இரும்பு கேட் விழுந்து பலி.. தந்தையை பார்க்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!


சென்னையில் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு மூன்று அடுக்கு கட்டிடத்தில் துணிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று சங்கரை பார்க்க வந்த அவரது மகள் துணிக்கடையின் வாசலில் உள்ள இரும்பு கேட் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் இரும்பு கேட் சிறுமி மீது விழுந்தது. 

இதில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரும்பு கேட்டை சரியாக மூடாதது தான் விபத்துக்கு காரணம் எனக் கூறப்படும் நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தந்தை பார்க்க அவர் வேலை செய்யும் இடத்திற்கு வந்த சிறுமி எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

கர்ப்பமடைந்ததை போல் உண்டாகும் போலியான அறிகுறிகள்... காரணங்களும்.. கண்டறியும் வழிகளும்..!

What No One Tells You About Switching to Natural Deodorant