சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை; மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!1101335995


சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை; மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!


சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் , சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி மாணவராக பயின்று வந்தார்.  அவர் நேற்று தனது அறையில் தூக்கிட்ட நிலையில் இருந்தது குறித்து சக மாணவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற கோட்டூர்புரம் போலீசார், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடியாத காரணத்தால் ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் , மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் தூக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தற்கொலைக்கான முழுமையாக காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் மற்றொரு மாணவர் சரியாக படிக்க முடியாத காரணத்தால் மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

What No One Tells You About Switching to Natural Deodorant