மோசடி வழக்கில் சிக்கிய அமைச்சர் பதவி பறிப்பு - அரசு செய்தி வெளியிட்டுள்ளது மோசடி வழக்கில் சிக்கியதுடன், 50 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதால், மூத்த தலைவர் பார்த்தா சட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆசிரியர் நியமன மோசடி வழக்கில், மாநில கல்வி அமைச்சராக இருந்த தொழில் துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.அவருடைய நெருங்கிய கூட்டாளியும், தோழியுமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் இருந்து, ஏற்கனவே 21 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மேலும், 29 கோடி ரூபாய் ரொக்கம், ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், பல சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, திரிணமுல் காங்.,குக்கு, எதிர்க்கட்சியான பா.ஜ., வலியுறுத்தி வந்தது. ஆனால், மூத்த தலைவரும், மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவருமான பார்த்தா சட்டர்ஜி பதவியில் இருந்து விலக மறுத்து வந்தார...