நாடு முழுவதும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை!484864453
நாடு முழுவதும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை! புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு பல்வேறு தடைகள் மற்றும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குக்கு ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படும் என்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை கைவிடுவதற்கு அரசாங்கம் போதுமான அவகாசம் அளித்துள்ளது என்றும் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அண்மையில் அறிவித்தார்!! சுற்றுச்சூழல் அமைச்சக அறிவிப்பின்படி, பாலிஸ்டிரீன் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் பொருட்கள் உட்பட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை இன்று முதல் தடை செய்யப்படுகிறது.பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காதணிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், மிட்டாய் குச்சிகள், பிளாஸ்டிக் கப்புகள், ப...